
பெரியவரை கண்ட இளைஞன் ஒருவன் குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாமல் உள்ளேன். அதை பெறுவது எப்படி எனக்கேட்டான்.
வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் உள்ள ஆடுகள் எல்லாவற்றையும் படுக்க வைத்து விட்டு இன்று உறங்க செல் என்றார். '' சில ஆடுகள் நிற்கவும், படுக்கவும் இருந்தன. சில ஆடுகள் இலை தளைகளை தின்று கொண்டிருந்தன. அதனால் எல்லா ஆடுகளையும் ஒன்றாக உறங்க வைக்க முடியவில்லை. அதனால் எனது துாக்கமும் தொலைந்து போச்சு'' என மறுநாள் அவரிடம் சொன்னான். அதற்கு இதைப்போலத்தான் முடியாத பிரச்னைகளை காலத்தின் கையில் விட்டு விடு. உன்னால் முடியும் என நினைப்பதை மட்டும் செய். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்து விட முடியாது என்பதை புரிந்து கொள்.
நிம்மதி உன்னிடத்தில் தான் உள்ளது என்றார் பெரியவர். இந்த ரகசியம் தெரியாமல் தான் பிரச்னைகளை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் பலர் அந்த இடத்திலிருந்து ஓடி விடுகிறார்கள். அவர்களுக்கான தகவல் தான் இது என அழுத்தமாக சொன்னார் பெரியவர்.