ADDED : செப் 27, 2019 10:16 AM

டென்மார்க் நாட்டை ஆண்ட ராஜாவை எதிர்த்து அங்குள்ள தளபதி கிளர்ச்சியில் ஈடுபட்டார். கோட்டையில் புரட்சிக் கொடியை ஏற்றினார். ராஜாவுக்கு கோபம் வந்தது. ''உடனடியாக கொடியை அவிழ்த்து விட்டு கீழே வராவிட்டால் நான் அனுப்பும் போர்வீரன் அதை அவிழ்ப்பான்'' என எச்சரித்தார்.
''என்னை நோக்கி வரும் வீரனைச் சுட்டு வீழ்த்துவேன்.முடிந்ததைப் பாருங்கள்'' என்றார் தளபதி.
ராஜா தயங்கவில்லை. ''தளபதியே! அனுப்பப் போகும் வீரன் வேறு யாரும் அல்ல. நானே அங்கு வரப் போகிறேன். என்னை வேண்டுமானால் நீங்கள் சுட்டுப் பார்க்கலாம்! தீவிரவாதத்திற்கு அடிபணிவதை விட பிறந்த தாய் நாட்டுக்காக உயிரைக் கொடுக்க தயாராக இருக்கிறேன்'' என ஆவேசமுடன் கத்தினார் ராஜா. தவறை உணர்ந்த தளபதி மீண்டும் தாய்நாட்டுக் கொடியை ஏற்றினார். இந்த ராஜாவைப் போலவே இயேசுவும் நம் வாழ்வில் தலையிட்டு உயிரைத் தியாகம் செய்தார். அந்த எண்ணம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
