
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரேக்க நாட்டை சேர்ந்தவர் அலெக்சாண்டர். போரில் இவரது படை தங்கப்பெட்டி ஒன்றை கைப்பற்றியது.
அலெக்சாண்டரிடம், ''அரசே.. விலை உயர்ந்த இந்த தங்கப்பெட்டியை எங்கே வைப்பது'' என்று கேட்டார் படைத்தளபதி.
''தளபதியாரே.. நீங்கள் நினைப்பதுபோல் இது ஒன்றும் விலை உயர்ந்தது அல்ல. இதன் மதிப்பை பொற்கொல்லரிடம் கேட்டால் சொல்லி விடுவார். ஆனால் அது உண்மையான மதிப்பாக இருக்காது. என்னிடம் உள்ள புத்தகங்களை பத்திரமாக வைக்க இதை பயன்படுத்துங்கள். அறிவை வளரச் செய்யும் புத்தகங்கள்தான் உண்மையான செல்வம்'' என்றார்.
இவரது பதிலைக்கேட்ட படைத்தளபதி மெய்சிலிர்த்து நின்றார்.