மூழ்கிய கப்பலில் இருந்து தப்பித்த பயணியர்கள் அருகில் இருந்த தீவில் கரையேறினர்.
உதவியை எதிர்பார்த்து நெருப்பை உண்டாக்கினர். கப்பல் ஒன்று அவர்களுக்கு உதவ முன் வந்தது. தன் கப்பலில் இருந்த சரக்கு பெட்டிகளை கடலில் தள்ளி விட்டு பயணியர்களை ஏற்றினார் கேப்டன். அவரின் செயலை நாளிதழ்கள் பாராட்டின. சில நாட்களுக்கு பின் கேப்டனிடம், முக்கிய பெட்டி ஒன்றை காணவில்லையே என கேட்டது நிர்வாகம். 'உயிர்களை விட பெட்டி முக்கியமானதாக தெரியவில்லை' என்றார் கேப்டன். பணியில் தவறு செய்த உங்களை டிஸ்மிஸ் செய்கிறோம் என்றது நிர்வாகம். இதை அறிந்த அவரது மனைவி பத்திரிக்கைகள் உங்கள் இரக்க குணத்தை பாராட்டியதே... அதன் மூலமே மீண்டும் வேலையில் சேர முயற்சிக்கலாமே எனக்கேட்டாள்.
அதற்கு அவர், 'செய்தியை படித்த பலருக்கும் உதவும் எண்ணம் வந்திருக்கும். தனக்கு வேலை போன செய்தி அவர்களுக்கு தெரிந்தால் உதவும் குணம் வராது' என்றார் அவர். கேப்டனால் காப்பற்றப்பட்ட ஒருவர் நன்றி சொல்ல வந்த போது நடந்ததை அறிந்து, தன்னுடைய நிறுவனத்தின் உயர்ந்த பதவியை கொடுத்தார்.
நல்ல செயல்கள் என்றும் வீண் போவதில்லை. அதற்கான பலன் வீடு தேடி வரும்.