நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இங்கிலாந்தின் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். விருந்து ஒன்றில் உரையாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அவரை பிடிக்காத நபர்களில் சிலர், சர்ச்சிலுக்கு தெரியாமல் அவரது கை குட்டையில் கழுதையின் முகத்தை வரைந்தனர்.
அதைப் பார்த்த சர்ச்சில் யாரோ முகம் துடைத்த கைக்குட்டையை எனக்கு அப்படியே தந்துள்ளீர்கள். அதில் அவரது முகம் நன்றாக படிந்துள்ளதே பாருங்கள் என்றார். அவரின் புத்திசாலிதனத்தை தெரிந்த நண்பர்கள் சிரிக்கவும், பிடிக்காதவர்கள் திருதிருவென விழிக்கவும் அரங்கம் கலகலப்பானது.