ADDED : ஆக 21, 2023 02:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காட்டில் மேய்ந்து கொண்டிருந்த மான் கூட்டத்தை நோக்கி வேடன் ஒருவன் விஷ அம்பை விடுத்தான். அது தவறி அருகில்இருந்த மரத்தில் பட்டு சிலநாள்களில் அது பட்டுப்போனது. அம்மரப்பொந்தில் வசித்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அங்கிருந்து போகவில்லை. கிளியின் அன்பைக் கண்ட தேவதை இறங்கி வந்து ஏன் இதை விட்டு விலகாமல் இருக்கிறாய் எனக் கேட்டது. தான் பிறந்து வளர்ந்த மரத்தை விட்டு விலகிச் செல்ல மனம் வரவில்லை என்றது. கிளியின் அன்பைக் கண்ட தேவதை உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது. அதற்கு கிளி இந்த மரம் பூத்து குலுங்க வேண்டும் என கேட்டது. இந்த கிளியை போல நாமும் பிறர் துன்பத்திலும் பங்கு கொள்ள வேண்டும்.