நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்ட்டினை பரலோகத்திற்கு தேவதுாதர்கள் அழைத்து சென்றனர். அங்கு ஒரு அறையில் ஆயிரக்கணக்கான கடிதங்களை பிரித்துக் கொண்டு இருந்தனர்.
அது பற்றி மார்ட்டின் கேட்க மனிதர்களிடம் இருந்து வந்தவை இவை. அதை படித்து ஆண்டவரிடம் சொல்லும் பணியைச் செய்கிறார்கள் என்றனர். மனிதர்களின் பிரச்னைகள், எதிர்பார்ப்புகள் அதில் இடம் பெற்றுள்ளன. அதற்கு அடுத்த அறையில் இரண்டு கடிதம் மட்டுமே இருப்பதை பார்த்தான் மார்ட்டின். தங்களுக்கு கிடைத்த வாழ்வுக்கு நன்றி தெரிவித்து வந்த கடிதங்கள் இவை என்றனர்.
உங்களுக்கு நல்ல குடும்பம், வேலை, வாழ்வு அளித்தவருக்கு தினமும் நன்றி கூறுங்கள். அது நன்றிக் கடிதமாக பரலோகத்தில் இருக்கும்.