நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறர் செய்யும் தவறினை உடனே சுட்டிக்காட்டுவது பீட்டரின் பிறவிக்குணம். ஒருநாள் சாலையில் வரும் போது ஓரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற வந்தார் ஒருவர். அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்த, 'கவலைப்படாதீர். உதவிக்கு ஆட்களை அழைத்து வருகிறேன்' எனச் சொன்னார். அதற்கு அவர், அழைத்து வருகிறேன் என சொன்னது நிகழ்காலம். அழைத்து வருவேன் என்று தான் சொல்ல வேண்டும் என பள்ளத்திற்குள் இருந்த போதும் தவறைக் சுட்டிக்காட்டினார். காப்பாற்ற வந்தவரோ எரிச்சல் அடைந்தார். இவர் இப்படியே இருக்கட்டும் என அங்கிருந்து நகர்ந்தார். ஒருவர் செய்யும் செயல் தவறு என தெரிந்தால் அவரிடம் நேரம் பார்த்து தவறைச் சொல்லுங்கள். இதுவே சிறந்த வழி.