ADDED : ஜூன் 10, 2022 08:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் ஒன்று புயலில் சிக்கியது. குழப்பத்தில் இருந்த கேப்டனுக்கு தனது அறையில் இருந்த வாசகம் மனதில் தெளிவை ஏற்படுத்தியது. 'ஆபத்து வரும் காலத்தில் நம்பிக்கையுடன் இரு. நிச்சயம் மீண்டு வருவாய்' என்பதே அது. ஏற்கனவே பலமுறை படித்திருந்தாலும் இப்போது அதைப் படித்தவுடன் நம்பிக்கை உண்டானது. தன்னால் ஆன முயற்சியை எடுத்தார். கப்பல் சேதமின்றி கரை ஒதுங்கியது. 
பார்த்தீர்களா... நம்பிக்கை ஒருவரை எப்படி காப்பாற்றும் என்பதை தெரிந்து கொண்டீர்களா. ஆபத்து வரும் காலத்தில் நம்பிக்கையுடன் அதை எதிர்கொள்ளுங்கள். நிச்சயம் அதிலிருந்து வெளிவருவீர்கள்.

