தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நல்லவன் வாழ்வான்

நல்லவன் வாழ்வான்

நல்லவன் வாழ்வான்


ADDED : ஜன 10, 2020 09:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2020 09:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீக்ரோ மக்களை ஆங்கிலேயர் அடிமைப்படுத்திய காலத்தில் நிகழ்ந்த சம்பவம் இது.

நீக்ரோ தம்பதியின் மகனாக பிறந்தவர் தாவர ஆராச்சியாளரான வாஷிங்டன் கார்வர். இனப்பாகுபாட்டால் ஒருமுறை ஆங்கிலேயர்கள் கார்வரின் பெற்றோரை கைது செய்தனர்.

அவர்களைக் குதிரையில் ஏற்றிச் செல்லும் போது, குழந்தையாக இருந்த கார்வர் கீழே விழ நேர்ந்தது. அதை ஆங்கிலேயர் பொருட்படுத்தவில்லை.

தெருவோரம் அழுதபடி நின்ற போது, ஆங்கிலேயர் ஒருவர் தன் வீட்டிற்கு துாக்கிச் சென்று வளர்த்தார். அறிவியலில் ஈடுபாடு கொண்ட கார்வர், தாவர ஆராய்ச்சியாளராக திகழ்ந்தார். ஆனால், அவர் நீக்ரோ என்பதால் அவர் கண்டுபிடிப்புகள் புறக்கணிக்கப்பட்டன. அந்த நேரம் அமெரிக்காவில் பருத்தி தோட்டங்களை பூச்சிகள் பாழ்படுத்தியதால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. கார்வரின் கையில் ஒரு பட்டாணிக்கடலை சிக்கியது. அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்,“எங்கள் நாடு பிழைக்க வேண்டும். நீக்ரோ மக்கள் கண்டு கொள்ளப்பட வேண்டும்” என ஜெபித்தார்.

அப்போது 15 ரக பட்டாணிகளை உற்பத்தி செய்யும் முறைகளைக் கண்டுபிடித்தார். கார்வரின் புகழ் உலகெங்கும் பரவியது.

“எளியவர்களை புழுதியிலிருந்தும், குப்பையிலிருந்தும் உயர்த்துகிறார். அவர்களை பிரபுக்களோடு உட்காரவும், சிம்மாசனத்தை அலங்கரிக்கவும் செய்கிறார்'' நல்லவன் வாழ்வான் என்பது நிஜம்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us