
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருசக்கர வண்டியை ஓட்டி வந்த சிறுவனை நிறுத்தினார் போலீஸ்காரர். உன் சைக்கிளில் ஏன் டைனமோ இல்லை எனக் கேட்டார். சாலையில் நிறைய மின் விளக்கு எரிந்து கொண்டு இருப்பதால் டைனமோ இல்லை என சொன்னான் சிறுவன்.
அதற்கு அவரோ வண்டியை ஓரம் கட்டி டயரில் இருந்த காற்றை பிடுங்கி விட்டார். காற்று எல்லா இடத்திலும் தான் நிறைந்து இருக்கிறது. வண்டி டயரில் எதுக்கு காற்று என அவனிடம் திருப்பிக் கேட்டார். இப்படி தான் நிறைய பேர் பொது விதிகளை மதிக்காமல் அலட்சியத்துடன் வாழ்கின்றனர். அவர்களை ஆண்டவர் விரும்புவதில்லை.