
மாவீரன் அலெக்சாண்டர் பலநாடுகள் மீதும் போர் தொடுத்து அவற்றைத் தன்வசப்படுத்தினார். அவரை ஒரு அறிஞர் சந்தித்தார்.
''நீங்கள் வெற்றி கொண்ட பலர் பலசாலியாக இருந்த போதும், எப்படியோ தோற்கடித்து விட்டீர்களே! அதற்கு உங்கள் மனஉறுதி
மட்டுமே காரணமாக இருக்குமென என என்னால் நம்ப முடியவில்லை. வேறு ஏதோ ரகசியம் இருக்க வேண்டும், அதை நான் தெரிந்து கொள்ளலாமா?'' என்றார்.
அதற்கு அலெக்சாண்டர் சொன்ன பதில் இது தான்.
''இது எனது வெற்றியல்ல, ஆண்டவரின் வெற்றி. அவர் அருளாலேயே வெற்றி பெற்றேன். அது மட்டுமல்ல, எந்த நாடுகளை ஜெயித்தேனோ, அந்த நாட்டு மக்களுக்கு முந்தைய மன்னர்கள் செய்து கொடுத்ததை விட அதிக வசதிகள் செய்து கொடுத்தேன்.
இதனால், அந்நாட்டு மக்கள் என்னை எதிர்க்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக எதிரிகள் என்று பாராமல், நான் வென்ற மன்னர்களை நண்பர்கள் போல் நடத்தினேன். அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்தேன். இதுவே என் வெற்றியின் ரகசியம்,'' என்றார்.
''நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். உங்கள் சத்துருக்களை (எதிரிகளை) சிநேகியுங்கள். நன்மை செய்யுங்கள்,'' என்கிறார் இயேசுநாதர்.