ADDED : நவ 29, 2021 10:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவை சேர்ந்தவர் ஹென்றி ஃபோர்ட். இவர் ஃபோர்ட் என்னும் மோட்டார் கம்பெனியை நிறுவி கோடீஸ்வரராக மாறினார். ஒருநாள் இளைஞன் ஒருவன் இவரை சந்தித்து, ''சார்.. உங்களிடம் நிறைய பணம் இருக்கிறது. என்னால் இதை சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை'' என கவலைப்பட்டான்.
''கவலைப்படாதே தம்பி. என்னிடம் இல்லாத ஒன்று உன்னிடம் உள்ளது. அதுதான் இளமை. இளமையாக இருந்தால் இதைவிட பல மடங்கு சம்பாதிக்க முடியும். இளமைக்காலத்தை சரியாக பயன்படுத்து என்னை விட சம்பாதிக்கலாம்'' என அறிவுரை கூறினார். இதைக்கேட்ட இளைஞனுக்கு மனதில் புத்துணர்ச்சி ஏற்பட்டது.
பார்த்தீர்களா உங்களின் முன்னால் எவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அதை வைத்து நல்ல செயல்களை செய்து வாழ்வில் உயர பாருங்கள்.