ADDED : நவ 22, 2021 11:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் டைம் பத்ரிகையின் அதிபர் ஹென்றி லுாயிஸிடம், விநோதமான பழக்கம் ஒன்று இருந்தது. அபார்ட்மெண்டில் 34வது தளத்தில் இருக்கும் இவர், லிஃப்டில் தனியாகத்தான் செல்வார். இதை கவனித்து வந்த காவலாளி இதற்கான காரணத்தை அவரிடம் கேட்டார்.
''எப்போதும் ஓய்வில்லாமல் உழைப்பதால், பிரார்த்தனை செய்ய முடிவதில்லை. எனவே லிஃப்டில் தனிமையாக இருக்கும் நேரத்தை பயன்படுத்திக்கொள்கிறேன்'' என்றார்.
பரபரப்பான மனிதருக்குள் இப்படி ஒரு பழக்கமா.. என ஆச்சர்யப்பட்டார் காவலாளி.