
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்த கிராமத்திற்கு வேறு ஊரில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுக்க தன்குடும்பத்துடன் வந்திருந்தார் காபிரியேல். அவருடைய பிள்ளைகள் இருவரும் தினசரி ஜெபம் செய்ய தவறுவதில்லை. அங்கு வாழ்ந்த ரவுடிகள் இவ்வூரில் தங்கி வேலை செய்வதற்கு கப்பம் கட்ட வேண்டும் என மிரட்டினர். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன்பணியை செய்தார் காபிரியேல். ஒருநாள் இரவு அவர்களது வீட்டை நோக்கி நிறைய ஆட்களை அழைத்துக் கொண்டு அவர்களை விரட்டுவதற்கு வந்தார் ரவுடி. இதைக் கண்ட அவர் வீட்டிற்குள் சென்று கதவை மூடி குடும்பத்துடன் தப்பிக்க முயற்சித்தார். அந்த சிரமமான சூழ்நிலையில் அவரது மகள்கள் இருவரும் இடைவிடாமல் ஜெபம் செய்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த அதிகமான தெருநாய்கள் ரவுடிகளை கடித்து துரத்தியது. பார்த்தீர்களா உண்மையான பிரார்த்தனை பலிக்கும்.