
நிலத்தில் பயிர்விளைச்சலை பார்த்த பின்னர் எப்போது அறுவடை செய்யலாம் என யோசித்தவாறே வீடு திரும்பினர் தம்பதியினர். எங்கள் ஊரில் அதிகாலையிலேயே அறுவடை செய்வார்கள் என பெருமை பேசினாள் மனைவி.
பதிலுக்கு இங்கு மாலையில் தான் அறுவடையை தொடங்குவார்கள் என்றான் கணவன். இருவருக்கும் இடையே நீடித்த பேச்சு பிடிவாதமாக மாறியது. வழியில் ஆறு ஒன்று குறுக்கிட அதில் நான் சொல்வதே சரி என சொல்லிக்கொண்டே விழுந்தாள் மனைவி. நான் சொல்வது தான் சரி என்றான் கணவன்.
பிறகு தான் அவன் மனைவி ஆற்றில் விழுந்து விட்டாள் என்பதையே உணர்ந்தான். ஆற்று வெள்ளத்தில் சற்று துாரம் இழுத்துச் சென்ற பின்னரே 'ஐயோ என் மனைவி' என்ற பதற்றமுடன் தண்ணீருக்குள் குதித்தான். ஆண்களே...மனைவியை நேசியுங்கள். பெண்களே...கடவுளுக்கு கீழ்ப்படிந்து நடப்பது போல கணவருக்கும் கீழ்ப்படியுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுங்கள். நிம்மதிக்கான வழி இதுவே.