sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

கேட்பது கிடைப்பது எப்போது?

/

கேட்பது கிடைப்பது எப்போது?

கேட்பது கிடைப்பது எப்போது?

கேட்பது கிடைப்பது எப்போது?


ADDED : ஜூலை 01, 2016 10:26 AM

Google News

ADDED : ஜூலை 01, 2016 10:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்' என்கிறார் இயேசு. ஆனால், சில சமயங்களில் கடவுளிடம் எவ்வளவு தான் ஜெபித்தாலும், பல விஷயங்கள் நிறைவேறாமலேயே போய் விடுகின்றன. இதற்கான காரணம் என்ன?

ஒருவர் பரலோகத்திற்கு (சொர்க்கம்) சென்றார். அங்கே அரண்மனை போன்ற வீடுகளை கண்டார். அந்த வீடுகளில் நிறைய அட்டைப்பெட்டிகள் இருந்தன. அவற்றை பல வர்ணத்தாள்களால் சுற்றி ஒட்டி, வண்ண ரிப்பன்களால் அழகாக கட்டி அடுக்கி வைத்திருந்தனர். அந்த பெட்டிகளில் எல்லாம் லேபிள் ஒட்டப்பட்டு, அதில் பலரது பெயர்கள் எழுதப்பட்டிருந்தன.

சொர்க்கத்துக்கு சென்றவர் அங்கிருந்த தேவதூதரிடம்,“தூதரே! இந்த பெட்டிகளில் எல்லாம் பெயர் எழுதப்பட்டு தயாராக இருந்தும், ஏன் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படாமல் இங்கேயே இருக்கிறது?” எனக் கேட்டார். அதற்கு அந்த தூதர்,“அன்பரே! இந்த உலகத்தில் உள்ளவர்கள் இரண்டு விதமாக இருக்கிறார்கள்.

எல்லோருக்கும் பலன் கொடுக்கும் விதத்திலேயே இங்கே பெட்டிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சிலர் ஜெபமே செய்வதில்லை. அதனால் அவர்களுக்கு இந்த பெட்டிக்குள் இருக்கும் பலன்கள் கிடைக்காமல் இருக்கிறது. மற்றொரு சாரார் ஜெபம் செய்தாலும் பொது நலம் இல்லாமல் தங்களது ஆசைகளை நிறைவேற்றும்படி மட்டும் தகாத விதமாக ஜெபிக்கிறார்கள். எனவே அவர்களுக்கும் பெட்டிகளை அனுப்ப இயலவில்லை,”என்றார்.

உண்மையிலேயே தூதர் சொன்னது போல, ஏராளமானோர் கடவுளை நினைப்பதே இல்லை. நினைப்பவர்களோ சுயநல சிந்தனையுடன் உள்ளனர். பொதுநலம் கருதி எப்போது பிரார்த்தனை செய்யப்படுகிறதோ, அப்போது தான் கேட்டது கிடைக்கும்.






      Dinamalar
      Follow us