/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
உங்கள் அருகில் இருப்பது யார்...
/
உங்கள் அருகில் இருப்பது யார்...
ADDED : அக் 11, 2021 02:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென நின்றது. டிரைவர் தனது பக்கத்து சீட்டில் துாங்கி கொண்டிருந்த நண்பரை எழுப்பினார். 'டேய்... நீ துாங்குவதை பார்த்தால் எனக்கும் துாக்கம் வருது. போய் பின் சீட்டில் துாங்கு' என்றார். நண்பனும் பின்னால் சென்றான்.
டிரைவர் சொன்னதை கவனித்தீர்களா... பல நேரங்களில் அருகில் இருப்பவரை பொறுத்துத்தான் நமது செயல்களும் அமைகின்றது. நம் பக்கத்தில் இருப்பவர் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் நாமும் இருப்போம்.
வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறீர்களா... உங்கள் அருகில் இருப்பது யார்.