ADDED : செப் 14, 2021 04:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நண்பர்கள் இருவர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் ஒரு விஷயத்தில் சண்டை ஏற்பட்டது. இதனால் ஒருவன் மற்றொருவனை அறைந்தான். அடி வாங்கியவன்
அங்குள்ள மணலில், 'உயிர் நண்பன் என்னை அறைந்து விட்டான்' என எழுதினான். அதைப்பார்த்த மற்றொருவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவர்கள் மீண்டும் நடந்தபோது, எதிரே வந்த லாரி அடி வாங்கியவன் மீது மோத வந்தது. அதைப்பார்த்த மற்றொருவன் அவனை காப்பாற்றினான். ஆபத்திலிருந்து தப்பியவன் அங்குள்ள கல்லில் 'உயிர் நண்பன் எனக்கு உயிர் கொடுத்தான்' என எழுதினான். இதற்கு என்ன அர்த்தம் என்று இன்னொரு நண்பன் அவனிடம் கேட்டான்.
''ஒருவர் செய்யும் தீமையை மணலில் எழுதினால் காற்றானது அதை அழிக்கும். அதுவே அவர் செய்யும் நன்மையை கல்லில் எழுதினால் அது என்றுமே அழியாது” என்று சொன்னான்.