
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* வாழ்க்கை என்பது சற்று நேரம் தோன்றி மறைந்து போகும் புகை.
* நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை; தனக்காக சாவதுமில்லை.
* மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை. வயலின் பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன்மீது வீசியதும், பூ இல்லாமல் போய் விடுகிறது.
* மனக்கசப்பு, கோபம், குரோதம், கூக்குரல், ஏச்சுப்பேச்சு ஆகிய குணங்களை விட்டொழியுங்கள். ஒருவருக்கொருவர் கருணையோடும், வாஞ்சையுள்ளத்தோடும் மன்னித்து வாழுங்கள்.
* விருந்து செய்யும்போது ஏழைகளையும், நடக்க இயலாதவர் களையும் கூப்பிடுவாயாக.
* ஒன்றின் துவக்கத்தை விட அதன் முடிவு தான் சிறந்தது.

