/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கட்டுரைகள்
/
பென்சிலை எடுங்க டிக் பண்ணுங்க!
/
பென்சிலை எடுங்க டிக் பண்ணுங்க!
ADDED : ஏப் 14, 2015 11:40 AM

உங்கள் வாழ்நாள் வீணாகிக்கொண்டிருக்கிறது என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? ஒரு பென்சிலை எடுங்கள். கீழேயுள்ள கேள்விகளுக்கு 'ஆம்' அல்லது 'இல்லை' என்ற பதிலை குறியுங்கள். உங்கள் நிலைமை உங்களுக்கே புரிந்து விடும்.
01. யாராவது கஷ்டப்படும் போது, அவருக்காக சிறிய உதவி செய்திருக்கிறீர்களா?
02. 'இந்த பிரச்னையை சமாளிக்க என்ன செய்யப்போகிறேன்' என்று யாராவது தவித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு
வழிகாட்டவாவது செய்திருக்கிறீர்களா?
03. யாராவது துயரத்தில் இருக்கும் போது, அவரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளையாவது பேசியிருக்கிறீர்களா?
04. கெட்ட பழக்கங்களைக் கொண்டவரை சீர்திருத்தும் வகையில் அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்களா?
05. கடவுளை நம்பாத ஒருவருக்கு 'ஆன்மிக வாழ்வு தான் உயர்ந்தது' என விளக்கி இருக்கிறீர்களா?
06. தன்னலத்தையும், பெருமை பேசுவதையும் ஒதுக்கிவிட்டு, பிறர் நலம் பேணுவதையும், பணிவாக பேசுவதையும் கடைபிடிக்கிறீர்களா?
07. ஆடம்பரம் மற்றும் சண்டையால் சிரமப்படும் குடும்பத்தினர் நல்வாழ்வு வாழ புத்திமதி கூறியிருக்கிறீர்களா?
08. உங்கள் மனதில் இருந்து பகை உணர்வையும், பழி உணர்வையும் நீக்கிவிட்டு, பாசத்தையும், மன்னிக்கும் மனப்பான்மையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
09. பிறரது கஷ்டங்களைக் குறைக்கும் வகையில் அந்தப் பளுவை ஏற்றிருக்கிறீர்களா?
10. உங்கள் வாழ்நாளில் ஒரு மரத்தை நட்டு, அதன் நிழலில் பத்து பேர் இளைப்பாறுவதைப் பார்த்திருக்கிறீர்களா?
இவற்றுக்கு 'ஆம்' என்ற பதில் வருமானால் கடவுளின் ஆசிர்வாதத்துக்கு ஆளாகியிருப்பீர்கள். 'இல்லை' என்றால், அந்தக் கேள்விகளுக்கு 'ஆம்' என்ற பதில் வரும்படியாக உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொள்ளுங்கள்.
''அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யுங்கள்,'' என்ற பைபிள் வசனத்தை நினைவில் கொண்டால் இது சாத்தியம்.