ADDED : செப் 29, 2015 11:09 AM
இயேசு தன் சீடர்களுக்கு அறிவித்த போதனைகள் உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும்.
* எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் (சொர்க்கம்) அவர்களுடையது.
* துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.
* சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.
* நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் திருப்தியடைவார்.
* இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
* இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
* சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.
* நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள், பரலோக ராஜ்யம் அவர்களுடையது.
இயேசு நமக்கு போதித்த இரக்கம், நீதி. சமாதானம், எளிமை, சாந்தம் ஆகிய வார்த்தைகளை திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலே, இவ்வுலகில் சண்டை ஏது? போட்டி பொறாமை ஏது? நற்குணங்களை வளர்க்க நாமும் உறுதியெடுப்போம்.