நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோழர்கள் சிலர் ஒரு இடத்திற்கு நாயகத்துடன் பயணமாயினர். இரவில் காட்டில் தங்கி உணவு தயார் செய்வதற்கு தயாராயினர். நாயகத்திடம் அவர்கள் ''ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்'' எனக் கூறினர். அதற்கு அவரோ! ''நாம் அனைவரும் சமம். நமக்குள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு கூடாது. ஒருவர் தன்னை உயர்வாக நினைப்பவரை இறைவன் நேசிப்பதில்லை. என்னை நீங்கள் உயர்வாகக் கருதி தனிமைப்படுத்த வேண்டாம்'' என்றார். உணவு சமைக்க சுள்ளிகளை எடுக்கச்சென்றார்.

