நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணையும் புகழையும் வெறுத்த அதிசய அறிஞர் ஒருவர் வாழ்ந்தார் என்றால் நம்புவீர்களா... நம்பித்தான் ஆக வேண்டும். அறிவியல் அறிஞர் ஹென்றி காவெண்டிஷ். இவரிடம் விரும்பி வந்த பெண்களையும் தேடி வந்த புகழையும் அறவே வெறுத்தவர் இவர்.
ஒரு சமயம் ஒரு நண்பரின் வீட்டு விருந்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த அயல்நாட்டு பிரபலம் விஞ்ஞானி என்பதை அறிந்து இவரிடம் உரையாட விரும்பினார். ஆர்வ மிகுதியால் இவரை எதிர் கொண்டு புகழ ஆரம்பித்த போது அவசர வேலை இருப்பது போல காட்டி அவ்விருந்தினையும் புறக்கணித்து நழுவினார். புகழுக்கு மயங்காதீர்கள். திறமையை வளரவிடாது என்கிறது பைபிள்.

