நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கட்டுமானப் பொருள்கள் மூலம் கட்டடம் கட்டுகிறார் கொத்தனார். குறிப்பிட்ட உயரத்திற்கு மேலே பணிசெய்ய சாரம் அமைப்பார். பணி முடிந்ததும் சாரத்தை பிரிப்பார். அடுத்த கட்டட பணியின் போது தான் சாரம் தேவைப்படும். அதுவரை யாரும் அதை பொருட்படுத்தமாட்டார்கள்.
இது போல் தான் தொண்டு செய்பவர்களை தேவை முடிந்ததும் பொருட்படுத்துவது இல்லை. ஆனாலும் அவர்கள் சோர்ந்து விடாமல் உற்சாகத்துடன் பணியாற்றினால் ஆண்டவர் பெருமிதம் கொள்வார்.