
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குழந்தையின் முதல் ஆசிரியர் என்பவர் பெற்றோர். ஆனால் அவர்கள் வழிகாட்டத் தவறினால் குழந்தையின் எதிர்காலம் என்னாகும்? தாயார் பொழுதை வீணாக்கும் மெகா தொடர்களில் மூழ்கி விடுகிறார். தந்தையோ தீயபழக்கங்களில் ஈடுபடுகிறார். இதனால் குழந்தையை வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இளமையில் கிடைக்கும் சுதந்திரம் குழந்தைக்கு ஆபத்தானது.
அலைபேசி, கணினி போன்றவைகளை நல்ல விஷயத்தை தேடுவதற்காக பயன்படுத்தினால் தவறில்லை. கீழ்த்தரமான விஷயங்களில் மனம் ஈடுபட்டால் ஒழுக்கமின்மை உண்டாகும். துாக்கம் கெடும். மது, மாது, சூது என தீயவழிகளில் ஈடுபட்டு முடிவில் வாழ்வே கேள்விக்குறியாகி விடும். ஆண்டவரைப் போலவே தோற்றம் கொண்டவன் சாத்தான். நீரே சரியானதை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இரு என்கிறது பைபிள்.