நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நண்பர்களான மூன்று தவளைகள் மலை உச்சிக்கு ஏற முடிவு செய்தன. மலையில் இருந்து இறங்கிய பூனை ஒன்று மலை உச்சிக்கு செல்வது கடினம். முயற்சியை கைவிடுங்கள் என்றது. முதல் தவளை பின் வாங்கியது. மற்ற இரண்டும் களத்தில் குதித்தன. வழியில் நாய் ஒன்று மலையேறுவது கடினம் என்று சொல்ல இரண்டாவது தவளை முயற்சியைக் கைவிட்டது.
மூன்றாவது தவளை மட்டும் முன்னேறிச் சென்று உச்சியை அடைந்தது. மீண்டும் அடிவாரத்திற்கு வந்த போது, 'உன்னால் எப்படி சாதிக்க முடிந்தது' என பூனையும், நாயும் கேட்டன. 'லட்சியத்தில் உறுதி கொண்டவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான்'' என பதில் அளித்தது.