நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கரி சுரங்கத்தில் தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். வாசலில் ஒரு சிறுவன் தன் தந்தையைப் பார்ப்பதற்காக நின்றான். அதை அறிந்த ஒரு தொழிலாளி, ''இங்கே வருபவர்கள் எல்லோரும் ஹெல்மெட் அணிந்திருப்பார்கள். முகம் தெரியாது. உன்னால் உன் தந்தையை அடையாளம் காண முடியாது'' என்றார்.
அவனோ, “எனக்கு அவரைத் தெரியாது. ஆனால் அவருக்கு என்னைத் தெரியும்” என்றான்.
'' ஆண்டவர் என்னை அறிந்திருக்கிறார். நான் போகும் வழியை நன்கறிவார். அவர் என்னைச் சோதித்தபின் பொன் போல பிரகாசமாக்குவார்”.