நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன்னைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய விரும்பினார் மன்னர். மந்திரியுடன் மாறுவேடத்தில் நகர்வலம் சென்ற மன்னர் ஒரு பெரியவரிடம், '' ஐயா... நம் மன்னர் இறந்து விட்டார்'' என்றார். ''ஏழைகள் மீது இரக்கப்படுபவர் போய்விட்டாரே'' என வருந்தினார் அவர். அருகில் நின்ற பூவியாபாரி ஒருவர் மகிழ்ச்சியுடன், 'மன்னருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் கூடுவார்கள். அங்கு விற்பனை செய்தால் லாபம் கிடைக்கும்' என கூடையுடன் புறப்பட்டார்.
'அவரவருக்கு சாதகமானதை தான் உலகம் சிந்திக்கும். அதனால் மனசாட்சி சொல்வதை கேளுங்கள்' என்றார் அமைச்சர்.