நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன்னை நல்லவன் போல காட்டிக்கொள்ள சர்ச்சுக்கு சென்றான் ராபின். சர்ச் வாசலில் கையேந்தினான் ஒரு இளைஞன். 'உனக்கு கை, கால்கள் நல்லாத்தானே இருக்கு. உழைத்து சாப்பிட வேண்டியது தானே' என சத்தமிட்டான். மறுநாள் குழந்தையுடன் நின்ற ஒரு பெண் உதவி கேட்டாள். தரக்குறைவாகப் பேசி விரட்டினான்.
அதைக் கண்ட ஒரு பெரியவர், 'மற்றவர் மனதை வார்த்தையால் காயப்படுத்தாதே. முடிந்தால் உதவி செய். இல்லாவிட்டால் அமைதியாக கடந்து செல்' என்றார்.