நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'என்ன வேண்டும்' என ஏழை ஒருவனிடம் ஆண்டவர் கேட்டார். வீடு, பணம், தங்கம், வைரம் என அடுக்கினான். உடனே ஆண்டவர் விரலை நீட்ட அங்கிருந்த மரப்பெட்டி தங்கமானது. ஆனால் ஏழையோ போதும் எனச் சொல்லவில்லை. மறுபடியும் விரலை நீட்ட அந்த அறை தங்கமானது. அப்போதும் அவன் வாய் திறக்கவில்லை. “இன்னும் என்ன வேண்டும்?” எனக் கேட்க. 'அந்த விரல் வேண்டும்' என்றான்.
மனிதர்கள் எதிலும் திருப்தி அடைவதில்லை.