நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கப்பல் ஒன்று நடுவழியில் சிக்கிக் கொண்டது. மாலுமிகள் குடிப்பதற்கு தண்ணீர் இன்றி வாடினர்.
இந்நிலையில் எதிரே ஒரு படகு வரவே தண்ணீரைக் கேட்பதற்காக வெள்ளைக் கொடியைக் காட்டினர். அந்தப் படகும் இவர்களை நெருங்கி வந்தது. தங்களின் நிலையைச் சொல்லி உதவி கேட்டனர்.
''நண்பர்களே! நீங்கள் இப்போது இருப்பது கடலுக்குள் இருக்கும் அமேசான் நதிக்குள். கடலாக இருந்தாலும் இப்பகுதியில் நல்ல நீரே உள்ளது. தேவையான அளவுக்கு தண்ணீர் குடிக்கலாம்'' என்றனர்.
தங்களின் அருகிலேயே நல்ல தண்ணீர் இருந்தும் மாலுமிகளுக்கு விபரம் தெரியவில்லை. இது போல பிரச்னைக்கான தீர்வை ஆண்டவர் பக்கத்திலேயே வைத்திருப்பார்.