நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு நல்லது, கெட்டதை சொல்லி வளர்ப்பது பெற்றோரின் கடமை. செல்லம் கொடுத்து அவர்களின் தவறுகளை கண்டிக்காமல் பெற்றோர் விட்டு விடுகின்றனர். இதனால் வளர்ந்த பிறகும் பொறுப்பு வருவதில்லை.
இரவில் நீண்ட நேரம் கண் விழித்தல், காலையில் தாமதமாக படுக்கையை விட்டு எழுதல், தன் பணிகளைத் தானே செய்யாமல் இருத்தல், குடும்பத்தினருக்கு உதவி செய்யாமல் பொழுது போக்குதல் போன்ற செயல்களை அவ்வப்போது கண்டித்து திருத்துங்கள். கண்டிப்பே குழந்தைகளுக்கு கண்ணியத்தை தரும் என்கிறது பைபிள்.