நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரிதாக வளர்ந்திருந்த சந்தனமரம் சோகமாக இருந்தது. ' ஏன் கவலையா இருக்க?' என முள்செடி கேட்டது. 'உன்னை யாரும் கண்டுக்க மாட்டார்கள். ஆனால் பலவழிகளில் நான் பயன்படுவதால் நன்றாக வளரும் போதே என்னை வெட்டி விடுவார்கள்' என சந்தனமரம் புலம்பியது.
''நான் தான் சிரம்படுறேன்னா... நீங்களுமா...'' என்றது முள்செடி.
இந்த மரத்தைப் போலவே மனிதர்கள் இருக்கிறார்கள். எப்படி என்றால்.. நம்மிடம் எத்தனையோ பலம் இருந்தாலும் பலவீனம் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. பலத்தை பலவீனமாகவும், பலவீனத்தை பலமாகவும் மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு. வருத்தப்படுவதால் பயன் இல்லை.