
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேச்சாலும், செயலாலும் செய்யும் தீமை தான் குற்றம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் அதைவிட கொடிய குற்றம் ஒன்று உள்ளது. அது தான் கெட்டதை நினைப்பது.
யாருக்கும் தெரியாது என நினைக்கிறோம். ஆனால் எந்த இருட்டிற்கும் பார்க்கிற விழி இருக்கும். எந்த சுவருக்கும் கேட்கிற காது இருக்கும். சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும். தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும். நீங்கள் மனதளவில் நினைக்கும் தீங்கினை ஆண்டவர் எப்போதும் கண்காணிக்கிறார். தீமையைக் கண்டு பயப்படுங்கள். அதில் இருந்து விலகுங்கள்.