
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுதோல்வி என்றாலும் தவறான முடிவுக்கு சில மாணவர்கள் செல்கின்றனர். ஏன் தோல்வி அடைந்தோம் என ஆராய்வதில்லை. படிக்க சிரமமாக இருக்கிறது என்றால் பாடங்களை எப்படி புரிந்து படிப்பது, தேர்வுக்கு எப்படி தயாராவது என மாணவர்கள் சிந்திக்க வேண்டும். அறிவியல் வளர்ச்சியால் பாடங்களை புரிந்து படிக்க நிறைய வழிமுறைகள் உள்ளன. பெற்றோரும் குழந்தைகளின் மனதில் எதிர்மறை எண்ணங்களை விதைக்க கூடாது. 'என் குழந்தைகள் புத்திசாலித்தனமும், பலமும் மிக்கவர்கள்' என்ற வசனத்தை மறவாதீர்.