நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிளி ஒன்றை வளர்த்தார் மன்னர். அரண்மனை வளாகத்தில் இருந்த மரக்கிளையில் அமர்ந்தால் அது திரும்ப எழுந்திருக்காது. இது பற்றி அரண்மனை வைத்தியரிடம் கேட்ட போது, 'கிளி ஆரோக்கியமாகத்தான் உள்ளது' என்றார். அரண்மனை தோட்டத்தில் பணிபுரியும் முதியவர் ஒருவர், கிளி அமரும் கிளையை வெட்டித் தள்ளினார். அதன்பின் கிளி ஓரிடத்தில் நில்லாமல் தோட்டம் எங்கும் பறக்க ஆரம்பித்தது. நம் செயல்களில் தடைகள் குறுக்கிடுவதும் சுதந்திரமாக வாழ்வதற்காகவே.