நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று வந்தான் பிரின்ஸ். தன் அனுபவம் பற்றி நண்பன் டேவிட்டிடம் ' வெளிநாட்டில் இருந்து மரக்கன்றுகளை வரவழைத்து சிங்கப்பூர் அரசு வளர்க்கிறது. மரமாக வளர்ந்த பின்னும் அதன் இலைகள் பழுப்பதும் இல்லை. உதிர்வதும் இல்லை. வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும், மழைக்காலத்தில் கதகதப்பாகவும் இருக்கிறது. பார்ப்பதற்கு அழகாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது' என்றான்.
அதைக் கேட்ட டேவிட் பைபிள் வசனம் ஒன்றை நினைவுபடுத்தினான். 'தியானம் செய்பவர்கள், நீதிமான்கள், நல்லவர்கள் அனைவரும் இலைகள் உதிராத மரத்தை போல இருப்பார்கள்' நீதிமான்கள் வாழும் இடம் எப்போதும் பசுமையாக இருக்கும்.