நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனைவியின் பேச்சைக் கேட்டு தன் தாயை வீட்டை விட்டு துரத்தினான் விமல். அருகில் உள்ள சர்ச் ஒன்றில் அடைக்கலம் புகுந்த தாய், அங்கு பணியாளராக சேர்ந்தாள். அவ்வப்போது, 'ஆண்டவரே... என் மகனுக்கு நல்ல புத்தியைக் கொடு; அவனை நல்லபடியாக வைத்துக்கொள். என்னை சீக்கிரம் உன்னிடம் சேர்த்துக் கொள்' என ஜெபம் செய்தாள். இதை பார்த்த பாதிரியார் அந்த தாயின் நற்பண்பை விமலுக்கு எடுத்துச் சொன்னார். தவறை உணர்ந்த அவன் தாயை வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.