
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறாமை என்பது விஷம் போன்றது. இதை மனதிற்குள் அனுமதித்தால் மனிதன் மிருகமாகி விடுவான். ஆடம்பரமாக வாழ்பவரைக் கண்டு ஏங்குவதும், மற்றவர்கள் தன்னை விட முன்னேறி விடக் கூடாதே என்ற வஞ்சகமும் பொறாமையின் வெளிப்பாடே.
'தனக்கு ஒரு கண் கெட்டாலும் பரவாயில்லை. எதிர்வீட்டுக்காரனுக்கு இரண்டு கண்ணும் கெட வேண்டும்' என்பது பொறாமைக்காரன் எதிர்பார்ப்பான். இதை 'எலும்புருக்கி நோய்' என்கிறார் சாலமோன் என்ற ஞானி.
பொறாமைக்கு இடம் தராதே என்கிறது பைபிள்.