sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

செய்திகள்

/

பத்து கட்டளைகள்

/

பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்

பத்து கட்டளைகள்


ADDED : ஜூலை 15, 2025 01:02 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோமானிய மன்னர் மார்க்கஸ் ஆரேலியஸ் சிறப்பான வாழ்க்கை அமைய விரும்புவோர் பின்பற்ற வேண்டியவற்றை பத்து கட்டளையாக போதித்தார். இவரது உபதேசங்கள் இதோ...

1. சுயவிழிப்புணர்வு: புற உலகில் நடக்கும் நிகழ்வுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே மனதை கட்டுப்படுத்துங்கள்.

2. ஏற்றுக்கொள்ளுதல்: எண்ணத்தை பொறுத்தது வாழ்க்கை. இன்பத்திற்கும், துன்பத்திற்கு காரணம் அதுவே.

3. நிலையற்றது: உலகில் எல்லாம் நிலையற்றவை. இதை புரிந்து கொண்டு அந்தந்த தருணத்தை சிறப்பானதாக்குங்கள்.

4. நல்ல ஒழுக்கம்: நல்லவன் இப்படித்தான் இருப்பான் என வாக்குவாதம் செய்யாதீர்கள். உங்களுக்கு நீங்களே நல்லவனாக இருங்கள்.

5. சுய பிரதிபலிப்பு: மேம்படுத்தும் சிந்தனையில் கவனம் செலுத்துங்கள். உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

6. சிறப்பாக செயல்படு: செய்யும் ஒவ்வொரு செயலையும் இறுதி செயலாக கருதி செய்யுங்கள். அது எல்லா செயலையும் சிறப்பானதாக்கும்.

7. பின்னடைவு: தோல்வியைக் கண்டு அஞ்சாதீர்கள். அவற்றை வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதுங்கள். பின்னடைவு ஏற்படாது.

8. இரக்கம்: உயிர்கள் மீது இரக்கப்படுங்கள். அவரவர் வாழ்வில் ஆயிரம் துன்பங்கள் நிறைந்துள்ளது என்பதை உணருங்கள். யாருடனும் மனக்கசப்பு கொள்ளாதீர்.

9. நம்பகத்தன்மை: நீங்கள் நீங்களாகவே இருங்கள். நம்பகத்தன்மையுடன் செயல்படுங்கள்.

10. நன்றியுணர்வு: தினமும் உயிருடன் இருப்பது எவ்வளவு அரிய விஷயம். எனவே ஒவ்வொரு செயலுக்கும் நன்றியுடன் இருங்கள்.






      Dinamalar
      Follow us