நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தனிமனிதன் முதல் பொதுவாழ்வில் இருப்பவர் வரை அனைவருமே பேச்சால் பிரச்னைக்கு ஆளாகின்றனர். இதில் தவறான பேச்சு, தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பேச்சு என இருவிதம் உண்டு. பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும். பேசிய வார்த்தைக்கு நுாறு விதமான அர்த்தங்கள் உண்டு. எப்படி பேசுவது என்பதை விட எப்படி பேசக் கூடாது என அறிந்து கொள்வதில் தான் புத்திசாலித்தானமும், வெற்றியும் இருக்கிறது.
குடும்பத்தில் சண்டை வந்தால், 'அதிகம் பேசாதே; அவதிப்படாதே' என பெரியவர்கள் அறிவுரை சொல்வார்கள். அதற்காக ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னால் விஷயத்தை புரிய வைக்க முடியாது. பேசுபவருக்கும் கேட்பவருக்கும் பயனுள்ளதாக பேச்சு அமைய வேண்டும். கேட்பவருடைய கண்களை பார்த்து பேசினால் அது உண்மையும், உறுதியும் கொண்டதாக இருக்கும்.