ADDED : ஆக 01, 2025 07:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிலருக்கு வருமானம் குறைவாக இருக்கும். ஆனால் அதை மறைத்து வசதியானவர் போல காட்டிக் கொள்வர். மற்றவரிடம் தற்புகழ்ச்சியாகப் பேசுவர். இதனால் பரமபிதாவின் அன்பு கிடைக்காமல் இவர்கள் நரகத்தை அடைவர் என்கிறது பைபிள்.
ஒரு சமயம் சொற்பொழிவு ஆற்றிய ஆண்டவர், 'மக்களுக்கு துன்பம் இழைக்கும் மன்னர், ஏழைகளுக்கு உதவாதவன், பெற்றோரை புறக்கணித்தவன், புறம் பேசுபவன், குடிகாரன், தற்பெருமை பேசுபவன்' ஆகியோர் நீதி விசாரணையின்றி நரகத்தில் தள்ளப்படுவர் என்றார்.
'ஏழையாக பிறந்தாலும் தன்னிடம் இருப்பதைக் கொண்டு திருப்தியுடன் வாழ்கிறேன்' எனச் சொல்பவன் சொர்க்கத்தை அடைவான்' என்றார் ஆண்டவர்.