நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். அவர் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர்.
ஆனால் பிரச்சாரத்தின் போது அவரையும் ஒருவர் சுட்டார். மரணத்தோடு போராடிய போது அருகில் இருந்த நண்பனிடம், ''அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்களா? யாருக்கும் ஆபத்து இல்லையே'' எனக் கேட்டார். இறக்கும் போது கூட பிறர் மீது அன்பு காட்டுபவரே சிறந்தவர்.