நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்காவில் குழந்தை வளர்ப்பு பற்றிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் பேசிய தத்துவவாதிகள், பெற்றோருக்கு அறிவுரை கூறினர். அதன்படி குழந்தைகளைக் கண்டிக்க வேண்டாம். அவர்களின் மனம் போன போக்கில் வளர்க்கலாம். நம்முடைய சிந்தனைகளை சிறுவயதிலேயே அவர்களிடம் திணிக்கத் தேவையில்லை. பக்குவம் வந்ததும் அவர்களாகவே கற்றுக் கொள்வர் என்றனர். பெற்றோரும் அப்படியே பின்பற்றினர். அதனால் அவர்களின் வாழ்க்கையே சீரழிந்தது.
'ஹிப்பிகள்' என்ற பெயரில் குழந்தைகள் பல் துலக்காமல், குளிக்காமல், ஊதாரித்தனமாக திரிந்து போதைக்கும் அடிமையாயினர்.
குழந்தைகள் மீது அன்பு காட்டுங்கள். ஆனால் செல்லம் கொடுக்காதீர்கள். சிறுவயதில் தவறுகளைக் கண்டிக்காவிட்டால் அவர்களின் எதிர்காலம் வீணாகி விடும் ஜாக்கிரதை!