நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போர்க்களத்தில் இருந்த வீரர்களிடம், 'இன்று நடந்த போரில் சிறந்த வீரர் யார்?' எனக் கேட்டார் தளபதி.
'தன் உயிரைப் பணயம் வைத்து இன்னொரு வீரனை காப்பாற்றிய ஜார்ஜ் தான்' என்றான் ஒருவன்.
'இல்லை... நாட்டைக் காக்க துப்பாக்கிக் குண்டுகளை மார்பில் தாங்கினானே அல்போன்ஸ்... அவன் தான்' என்றான் மற்றொருவன்.
'கை, கால்களை இழந்த நிலையிலும் ' தேசம் வாழ்க' என முழங்கிய சார்லஸ் தான் 'என்றான் இன்னொருவன்.
தளபதி கடைசியாக, 'போர்க்களத்தில் உயிர் போவதும், ஒருவரை ஒருவர் பாதுகாப்பதும், உறுப்புகளை இழப்பதும் இயல்பான விஷயமே... நம் வீரன் ஒருவனை எதிரிநாட்டு வீரன் வெட்டுவதற்காக வாளை ஓங்கிய போது போர் நிறுத்தம் செய்யும்படி முரசு அறையப்பட்டது. அதைக் கேட்டதும் ஓங்கிய கையை கீழே போட்டான் அவன். எதிரியாக இருந்தாலும் தர்மத்துடன் நடப்பவனே சிறந்த வீரன்' என்றார்.