
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனச்சோர்வாக இருப்பவர், பணநெருக்கடி உள்ளவர், பிரச்னையில் சிக்கியவர் போன்றோர் மீது அன்பு காட்டுங்கள்.
முதலில் அவர்கள் உங்களின் ஆறுதலை ஏற்க மறுக்கலாம். ஆனால் நாளடைவில் உங்களின் அன்புக்காக காத்திருப்பர். பிறர் மீது அன்பு காட்டினால் நம் வாழ்வில் அதிசயங்கள் நிகழும்.
அவை என்ன தெரியுமா...
* துன்பம் இன்பமாகும்.* இருள் வெளிச்சமாகும்.
* கசப்பு இனிப்பாகும்.
* வேதனை சுகமாகும்.
* மலையும் நொறுங்கும்.
* கடலும் ஜாடிக்குள் அடங்கும்.
* ஆகாயமே மண்ணில் தவழும்.
* அன்பால் அனைத்தும் நலமாகும்.

