ADDED : மே 01, 2025 02:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்த அவசரமான உலகத்தில் படிப்பு, பணம், பதவி, புகழ் என எதையோ தேடி மனிதன் அலைகிறான். இது தேவைதானா என யாரும் யோசிப்பதில்லை. பணம் சம்பாதிப்பது என்பது நம் குடும்பத்தோடு நிம்மதியாக வாழ்வதற்காகவே.
முன்பெல்லாம் குடும்பத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஒன்றாக அமர்ந்து ஒரு வேளையாவது சாப்பிட்டார்கள். அப்போது அன்பு, பாசம், கருணை, விட்டுக்கொடுத்தல் போன்ற பண்புகள் மக்களின் மனதில் நிரம்பி இருந்தது.
ஆனால் இப்போது 24 மணி நேரமும் அலைபேசியும் கையுமாக மனிதனின் வாழ்க்கை நகர்கிறது. இனியாவது குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுங்கள். உறவுகளை மதியுங்கள்.