ADDED : நவ 24, 2023 09:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை தத்துவ ஞானி சாக்ரடீஸை பார்க்க வந்த ஒருவர், சாக்ரடீசின் நண்பரைப் பற்றி பேச விரும்பினார். அதற்கு அவர் வந்த நபரிடம் மூன்று கேள்விகளைக் கேட்டார்.
1. என் நண்பர் செய்த செயலை நேரடியாகப் பார்த்தீரா...
2. அவரை பற்றி நல்லதாக கூறப் போகிறீரா...
3. என்னிடம் பேசுவதால் ஏதாவது நன்மை உண்டா...
எல்லாவற்றிற்கும் 'இல்லை' என பதிலளித்தார் வந்த நபர். உடனே சாக்ரட்டீஸ், “யாருக்கும் பயனற்ற விஷயத்தை பேசாதீர்” என்றார். பயனுள்ள விஷயங்களைப் பற்றி மட்டுமே நல்ல நண்பர்கள் விவாதிப்பர்.