நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலையை முடித்து விட்டு தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து வெளியே வந்தனர். தந்தையைப் பார்க்க ஒரு சிறுவன் அங்கே நின்றிருந்தான். அருகில் இருந்த ஒருவர், “இங்கே எல்லோரும் ஹெல்மெட் அணிந்திருப்பதால் முகம் தெரியாது. உன்னால் அடையாளம் காண முடியாது. வீட்டுக்குப் போ” என்றார்.
அவனோ,“எனக்கு அவரைத் தெரியாது. ஆனால் அவருக்கு என்னை நன்றாகத் தெரியுமே” என்றான். அதுபோல ஆண்டவர் நம்மை அறிந்திருக்கிறார். நாம் தான் அவரை அணுகாமல் இருக்கிறோம். அணுகினால் பொன்னாக ஜொலிப்போம்.